தூத்துக்குடியில் காணாமல் போன இளம்பெண்; உதகையில் போலீசார் மீட்பு
உதகையில மீட்கப்பட்ட இளம்பெண்ணுடன் அப்துல்கலாம் ஆதரவற்றோர் இல்லத்தினர்.
உதகையில் இளம்பெண் ஒருவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டு சுற்றித்திரிந்த நிலையில் காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதையடுத்து காவல்துறையினர் இளம்பெண்ணை மீட்டு அப்துல் கலாம் ஆதரவற்றோர் இல்லத்தில் ஒப்படைத்தனர்.
அங்கு இளம் பெண்ணின் விபரத்தை சேகரித்த போலீசார் மற்றும் அப்துல் கலாம் ஆதரவற்றோர் இல்லத்தினர் விசாரித்ததில் தூத்துக்குடியைச் சேர்ந்த பெண் என தெரியவந்தது.
உடனடியாக இளம்பெண்ணின் குடும்பத்தாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அந்த இளம்பெண் பாதுகாப்பாக அவரது குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
இளம்பெண்ணை மீட்டு குடும்பத்தாரிடம் ஒப்படைத்த உதகை அப்துல்கலாம் ஆதரவற்றோர் இல்லம் செய்த இந்த செயல் அனைவரிடத்திலும் பெரும் பாராட்டைப் பெற்றுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu