உதகையில் நலத்திட்ட உதவிகளை வழங்கிய வனத்துறை அமைச்சர்

உதகையில், ரூ.4 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை, பயனாளிகளுக்கு அமைச்சர் ராமச்சந்திரன் வழங்கினார்.

உதகையில், உங்கள் தொகுதியில் முதலமைச்சர் என்ற திட்டத்தின் கீழ் 4 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு அமைச்சர் ராமச்சந்திரன் இன்று வழங்கினார்.

அப்போது அவர் பேசியதாவது: தமிழகத்தில் தற்போதுள்ள 23.8 சதவிகித வனப்பரப்பை 33 சதவிகிதமாக அதிகரிக்க, 28 கோடி மரக்கன்றுகள் நட வேண்டியுள்ளது. இதற்காக சிறப்பு மர நடும் திட்டம் வகுக்கப்பட்டு வருகிரது. உதகை, குன்னூர், கோத்தகிரி மற்றும் கூடலூர் அரசு மருத்துவமனைகளில் புதிதாக ஆக்ஸிஜன் உற்பத்தி மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது என்றார்.

பின்னர் செய்தியாளர்களிடையே பேசிய அமைச்சர், நீலகிரி மாவட்டத்தில் வனத்துறை அனுமதி கிடைக்காமல் பல ஆண்டுகளாக நிலுவையிலுள்ள குடிநீர், மின்சாரம், சாலை வசதி உள்ளிட்ட திட்டங்களை, மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு செயல்படுத்தப்படும் என்றார்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!