உதகையில் மினி பஸ் மோதி விபத்து: சாலையில் சென்ற இருவர் படுகாயம்

உதகையில் மினி பஸ் மோதி விபத்து: சாலையில் சென்ற இருவர் படுகாயம்
X

பைல் படம்.

உதகையில் அஜாக்கிரதையாக ஓட்டி விபத்தை ஏற்படுத்தியதாக மினி பஸ் டிரைவர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

உதகை லோயர் பஜாரில் இருந்து பிங்கர்போஸ்ட் நோக்கி தனியார் மினி பஸ் சென்று கொண்டு இருந்தது. அப்போது சாலையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த சரக்கு வாகனம் மீது மினி பஸ் திடீரென மோதியது.

சரக்கு வாகனம் முன்னால் நின்ற இருசக்கர வாகனம் மீது மோதியதால், சாலையில் நடந்து சென்ற இருவர் நிலை தடுமாறி கீழே விழுந்தனர். இதனால் படுகாயமடைந்த அவர்களை சிகிச்சைக்காக உதகை அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதுகுறித்து தகவலறிந்த உதகை நகர மத்திய போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். விபத்தில் மினி பஸ் கண்ணாடி உடைந்து சாலையில் கிடந்தது. இதனை போலீசார் சுத்தம் செய்தனர்.

தொடர்ந்து அஜாக்கிரதையாக ஒட்டி விபத்தை ஏற்படுத்தியதாக மினி பஸ் டிரைவர் கார்த்திக் (வயது 35) என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!