உதகையில் எம்ஜிஆர் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்

உதகையில் எம்ஜிஆர் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்
X
உதகை காபி ஹவுஸ் சந்திப்பில் நீலகிரி அதிமுக சார்பில் எம்ஜிஆரின் 105 வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

புரட்சித்தலைவர் எம்ஜிஆரின் 105-வது பிறந்தநாள் விழா கொண்டாட்டம் நீலகிரி மாவட்ட அதிமுக சார்பில் உதகையில் நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக உதகை காப்பி ஹவுஸ் சந்திப்பில் மாவட்ட செயலாளர் கப்பச்சி வினோத் தலைமையில் கேக் வெட்டி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி, அதிமுகவின் உறுதிமொழி கொள்கை ஏற்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் கப்பச்சி வினோத், நகர செயலாளர் சண்முகம் , கூடலூர் சட்டமன்ற உறுப்பினர் பொன் ஜெயசீலன் அமைப்பு செயலாளர் கே ஆர் அர்ஜுனன், அம்மா பேரவை மாவட்ட செயலாளரும் முன்னாள் குன்னூர் சட்டமன்ற உறுப்பினர் சாந்தி ராமு, மாவட்ட கழக இணைச் செயலாளர் கோபாலகிருஷ்ணன், பாசறை மாவட்ட செயலாளர் ஹக்கீம் பாபு , பொதுக்குழு உறுப்பினர் டீகே தேவராஜ், மகளிர் அணியைச் சேர்ந்த முன்னாள் நகரமன்ற தலைவர் சத்தியபாமா, மாவட்ட மகளிர் அணி துணைச் செயலாளர் ஷர்மிளாதேவி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!