கல்லூரி மாணவியை கர்ப்பமாக்கிய கூலித்தொழிலாளி கைது

கல்லூரி மாணவியை கர்ப்பமாக்கிய கூலித்தொழிலாளி கைது
X

குணசேகர் என்கின்ற சதீஷ்.

தொடர்ந்து போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சதீசை கைது செய்தனர்.

உதகை அருகே எப்பநாடு கொரனூர் கிராமத்தில் வசித்து வருபவர் குணசேகர் என்கின்ற சதீஷ் (வயது 28) கூலித்தொழிலாளி. கடந்த பிப்ரவரி மாதம் சதீசுக்கு திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலை சேர்ந்த பெண் ஒருவருடன் பெற்றோர்கள் திருமணம் செய்து வைத்தனர். அந்த இளம்பெண் கர்ப்பம் அடைந்தார். வருகிற டிசம்பர் மாதம் குழந்தை பிறக்க உள்ளதால், பிரசவத்திற்காக கொடைக்கானலில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார்.

இதற்கிடையே சதீசுக்கு 17 வயது மதிக்கத்தக்க கல்லூரி முதலாம் ஆண்டு மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டு உள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் நெருக்கமானது. வெளியிடங்களுக்கு அழைத்து சென்று வந்து உள்ளார். அப்போது மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து மாணவியின் நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டதை அடுத்து, அதுகுறித்து தாய் கேட்டவுடன் தனக்கு நடந்ததை கூறி உள்ளார்.

இதுகுறித்து உதகை ஊரக அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் நடத்திய விசாரணையில் தனது மனைவி கர்ப்பமடைந்து சொந்த ஊருக்கு சென்றதால், இந்த சமயத்தை பயன்படுத்தி சதீஷ் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததும், இதனால் மாணவி 6 மாதம் கர்ப்பமாக இருந்ததும் தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சதீசை கைது செய்தனர். இதனையடுத்து மாணவி காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டு உள்ளார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!