பீல்ட் மார்சல் மானக்சாவின் நினைவுநாள் - அஞ்சலி செலுத்திய ராணுவத்தினர்

பீல்ட் மார்ஷல் சாம் மானெக்சாவின் 13வது நினைவு தினத்தை ஒட்டி, ஊட்டி பார்சி கல்லறை தோட்டத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் ராணுவத்தினர் நினைவு அஞ்சலி செலுத்தினர்.

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகில் உள்ள வெலிங்டன் மெட்ராஸ் ரெஜிமென்ட் பயிற்சி மையத்தில், பீல்ட் மார்ஷல் சாம் மானெக்சாவின் 13வது நினைவு தின நிகழ்ச்சி நடைபெற்றது. இதை ஒட்டி, ஊட்டி பார்சி கல்லறை தோட்டத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் ராணுவத்தினர் நினைவு அஞ்சலி செலுத்தினர்.

இந்த நிகழ்ச்சியில் பாதுகாப்பு படைத்தலைவர், மற்றும் முப்படையினர், ராணுவ பாதுகாப்பு பயிற்சி கல்லூரியின் கமாண்டண்ட்,மற்றும் வெலிங்டன் ஸ்டேஷன் கமாண்டன்ட் சார்பாக ராணுவத்தினர் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.

இந்த நிகழ்ச்சியுடன், 1971 ம் ஆண்டு இந்தியா - பாகிஸ்தான் போரில், இந்தியாவின் 50 ஆவது வருட வெற்றி கொண்டாட்டத்தையும் இணைந்து கொண்டாடினர்.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!