நீலகிரியில் நடைபெற்ற மெகா கொரோனா தடுப்பூசி முகாம்

நீலகிரியில் நடைபெற்ற மெகா கொரோனா தடுப்பூசி முகாம்
X

தடுப்பூசி செலுத்தி கொண்டவர்கள்.

தடுப்பூசி செலுத்தாதவர்களை கண்டறிந்து செலுத்துவதற்காக பணியாளர்கள் வீடு தேடி சென்று கொரோனா தடுப்பூசி செலுத்தினர்.

நீலகிரி மாவட்டத்தில் 11-ம் கட்ட மெகா கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்றது. அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்பட மொத்தம் 241 நிலையான மையங்கள் அமைக்கப்பட்டது. இந்த மையங்களில் 2-வது டோஸ் செலுத்தாத நபர்கள் குறிப்பிட்ட நாட்களுக்கு பின்னர் செலுத்த வந்தனர்.

தடுப்பூசி செலுத்தாதவர்களை கண்டறிந்து செலுத்துவதற்காக பணியாளர்கள் வீடு தேடி சென்று கொரோனா தடுப்பூசி செலுத்தினர். அதேபோல் உதகைபடகு இல்லம் போன்ற சுற்றுலா தலங்களிலும் சிறப்பு முகாம் நடந்தது. மேலும் நடமாடும் 20 தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டது. மொத்தம் 261 மையங்களில் தடுப்பூசி செலுத்தும் பணியில் 1044 பணியாளர்கள் ஈடுபட்டனர்.

இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறும்போது, நீலகிரி மாவட்டத்தில் இதுவரை 5 லட்சத்து 17 ஆயிரத்து 597 பேர் முதல் டோஸ் செலுத்தி உள்ளனர். 4 லட்சத்து 22 ஆயிரத்து 82 பேர் 2-வது போட்டுக்கொண்டனர். மொத்தம் 9 லட்சத்து 39 ஆயிரத்து 679 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது என்றனர்.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil