உதகையில் தேர்தல் நடத்தை விதிகள் குறித்து ஆய்வு கூட்டம்

உதகையில் தேர்தல் நடத்தை விதிகள் குறித்து ஆய்வு கூட்டம்
X

மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்ஷினி.

விதிமுறைகளை பின்பற்றி நகர்புற உள்ளாட்சி தேர்தலை நடத்த ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் மாதிரி நடத்தை விதிகள் குறித்த ஆலோசனை கூட்டம் இன்று உதகை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் பொறுப்பு வகிக்கும் மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்ஷினி தலைமையில் நடைபெற்றது.

இதில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் கலந்துக் கொண்டனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள 4 நகராட்சிக்குட்பட்ட 108 வார்டு உறுப்பினர்கள், 11 பேரூராட்சிக்குட்பட்ட 186 வார்டு உறுப்பினர்களுக்கான தேர்தல் தொடர்பான நடத்தை விதிமுறைகளை ஆட்சியர் விரிவாக எடுத்துரைத்தார்.

தேர்தல் தொடர்பான கூட்டங்கள் அரசின் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கட்டாயம் பின்பற்றி நடத்த வேண்டும் என்றும், இதை மீறும் பட்சத்தில் தேர்தல் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையிலுள்ள தால் தேர்தலை ரத்து செய்வது குறித்து ஆராயப்படும் என மாவட்ட வருவாய் அலுவலர் கூறினார்.

கொரோனா தொற்று அச்சுறுத்தலை உணர்ந்து தேர்தல் விதிமுறைகளை பின்பற்றி நகர்புற உள்ளாட்சி தேர்தலை நடத்த ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

Tags

Next Story
பெருந்துறையில் புகையிலை விற்பனைக்கு எதிராக கடைகளுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்