வனப்பகுதிகளில் ஏற்படும் காட்டு தீயை கட்டுப்படுத்துவது குறித்த கூட்டம்

வனப்பகுதிகளில் ஏற்படும் காட்டு தீயை கட்டுப்படுத்துவது குறித்த கூட்டம்
X

வனப்பகுதி தீயை கட்டுப்படுத்துவது பற்றிய கூட்டம் நீலகிரி மாவட்ட கலெக்டர் அம்ரித் தலைமையில் நடந்தது.

வனப்பகுதிகளில் ஏற்படும் காட்டு தீயை கட்டுப்படுத்துவது குறித்த ஆலோசனை கூட்டம் நீலகிரி மாவட்ட கலெக்டர் தலைமையில் நடந்தது.

நீலகிரி மாவட்ட கூடுதல் கலெக்டர் அலுவலகத்தில் வனப்பகுதிகளில் ஏற்படும் காட்டு தீயை கட்டுப்படுத்துவது தொடர்பாக வனத்துறை, வருவாய்த் துறை, உள்ளாட்சி துறை அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் கலெக்டர் அம்ரித் தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில் கலெக்டர் அம்ரித் பேசும்போது

வனப்பகுதிகளில் வறட்சி காரணமாக காய்ந்த சருகுகள், மரக்கிளைகள், புகை பிடிப்பவர்களால் வீசி எறியப்படும் சிகரெட் துண்டுகள், வனப்பகுதி அருகே தோட்டங்களை சுத்தம் செய்து சேகரிக்கப்படும் கழிவுகளை எரிப்பதாலும், கால்நடைகளை வனத்திற்குள் மேய்ப்பவர்களாலும் வனத்தில் தீ ஏற்பட பெரும் காரணமாக அமைகிறது.

வனப்பகுதி வழியாக செல்லும் சாலை ஓரங்கள் மற்றும் வனப்பகுதிகளில் எக்காரணத்தைக் கொண்டும் சமையல் செய்யக்கூடாது.

இந்த செயல்களால் வனங்களில் தீ ஏற்பட்டு பெரும் அபாயத்தை விளைவிக்கும்.

இதனால் விலை மதிக்க முடியாத செல்வங்கள் உள்ள வனப்பகுதி, வன உயிரினங்கள், நுண்ணுயிரினங்கள் அழியும் நிலை ஏற்படும். சுற்றுச்சூழல் அதிகமாக பாதிப்படையும். காட்டுத்தீயினால் உயிர் சேதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

எனவே, பொதுமக்கள் வனத்துறைக்கு முழு ஒத்துழைப்பு தருவது, வன தீ ஏற்படாதவாறு வனப்பகுதியை பாதுகாப்பது ஒவ்வொருவருடைய தலையாய கடமையாகும்.

வனப்பகுதியில் தீ ஏற்பட்டால் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் கொடுக்க வேண்டும். 0423-2444083 அல்லது 1077 என்ற தொலைபேசி எண்ணில் தகவல் தெரிவிக்கலாம்.

வனப்பகுதிகளில் முன் அனுமதியின்றி உள்ளே செல்வதும், பிரவேசிப்பதும் மற்றும் வனத்தீ ஏற்படுத்துவதும் குற்றமாகும். வன தீ ஏற்பட காரணமானவர்கள் மற்றும் உடந்தையாக இருப்பவர்கள் மீது தமிழ்நாடு வனச்சட்டத்தின் படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!