உதகையில் குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் நடைபெற்றது

உதகையில் குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் நடைபெற்றது
X

நீலகிரியில் 4-ம் காலாண்டிற்கான மாவட்ட அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் உதகை கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது.

ஆதரவற்றமற்றும் கைவிடப்பட்ட குழந்தைகள் கண்டறியப்பட்டால் மாவட்ட குழந்தைகள்பாதுகாப்பு அலுவலகத்துக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்

நீலகிரியில் 4-ம் காலாண்டிற்கான மாவட்ட அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் உதகை கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது.

கூட்டத்துக்கு கலெக்டர் அம்ரித் தலைமை வகித்து பேசும் போது, பள்ளி செல்லும் குழந்தைகள், பள்ளி செல்லா குழந்தைகள், பாலியல் குற்றங்களால் பாதிக்கப்படும் குழந்தைகள், பாதுகாப்பு மற்றும் பராமரிப்புக்காக குழந்தை இல்லங்களில் தங்கியுள்ள குழந்தைகள் ஆகியோருக்கு பாதுகாப்பான சூழலை ஏற்படுத்த வேண்டும்.

குழந்தை திருமணத்தில் இருந்து குழந்தைகளை பாதுகாக்க வேண்டும். கிராம, வட்டார, நகராட்சி அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டங்களை 3 மாதங்களுக்கு ஒருமுறை நடத்த வேண்டும். ஆதரவற்ற மற்றும் கைவிடப்பட்ட குழந்தைகள் கண்டறியப்பட்டால், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்துக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று கூறினார். கூட்டத்தில் இளைஞர் நீதி குழும முதன்மை நடுவர் பாரதிராஜா, மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்ஷினி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!