நீலகிரி மாவட்ட சிறப்பு முகாம்களில் ஒரு லட்சம் பேருக்கு தடுப்பூசி

நீலகிரி மாவட்ட சிறப்பு முகாம்களில் ஒரு லட்சம் பேருக்கு தடுப்பூசி
X
நீலகிரியில் நடந்த 5 கட்ட தடுப்பூசி முகாம்களில் ஒரு லட்சத்து 3ஆயிரத்து 236 பேருக்குகொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது.

நீலகிரி மாவட்டத்தில், வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை அதிக மையங்களில், கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் அமைக்கப்பட்டு, தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த மாதம் 2-ந் தேதி முதல் மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது.

கடந்த மாதம் 12-ந் தேதி நடந்த முகாமில் 28 ஆயிரத்து 726 பேர், 19-ந் தேதி 3 ஆயிரத்து 996 பேர், 26-ந் தேதி 23 ஆயிரத்து 845 பேர், கடந்த 3-ந் தேதி 17 ஆயிரத்து 369 பேர் என மொத்தம் 73,936 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. நேற்று முன்தினம் 5-ம் கட்ட தடுப்பூசி சிறப்பு முகாம் 312 மையங்களில் நடைபெற்றது. இதில் 32 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. முடிவில் 29 ஆயிரத்து 300 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது.

நீலகிரி மாவட்டத்தில், இதுவரை நடந்த 5 கட்ட தடுப்பூசி முகாம்களில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 236 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags

Next Story
ஈரோடு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: கூகுள் நிறுவனத்தின் உதவியுடன் குற்றவாளியை கண்டறியும் முயற்சி