செல்போனை தவறவிட்டவர்கள் புகார் தெரிவிக்கலாம்: காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத்

செல்போனை தவறவிட்டவர்கள் புகார் தெரிவிக்கலாம்: காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத்
X

பைல் படம்.

காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உள்ள சைபர் கிரைமில் தங்களது செல்போன் ஐஎம்இஐ எண்ணுடன் நேரில் வந்து புகார் கொடுக்கலாம்.

நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி நகரம், ஊட்டி ஊரகம், குன்னூர், கூடலூர், தேவாலா ஆகிய 5 காவல் உட்கோட்டங்கள் உள்ளது. கடந்த 2019, 2020-ம் ஆண்டுகளில் பொதுமக்கள் யாரேனும் தங்களது செல்போனை தவறவிட்டு இருந்தால், அதுகுறித்து சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையத்தில் இதுவரை புகார் தெரிவிக்காதவர்கள், தற்போது ஊட்டியில் உள்ள காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உள்ள சைபர் கிரைமில் தங்களது செல்போன் ஐஎம்இஐ எண்ணுடன் நேரில் வந்து புகார் கொடுக்கலாம் என நீலகிரி காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்