உதகையில் லாரி - கார் மோதி விபத்து : போலீசார் விசாரணை

உதகையில் லாரி - கார் மோதி விபத்து : போலீசார் விசாரணை
X

விபத்தில் நொறுங்கிய கார்.

விசாரணையில் குடிபோதையில் லாரி டிரைவர் ஓட்டி விபத்தை ஏற்படுத்தியதாக தெரிவதையடுத்து போலீசார், ஓட்டுனரை தேடி வருகின்றனர்.

உதகை அருகே எப்பநாடு பிக்கபத்தி மந்து பகுதியை சேர்ந்த 3 பேர், உதகைக்கு காரில் வந்துள்ளனர். கூட்ஷெட் சாலையில் எதிரே வந்த லாரி, திடீரென கார் மீது மோதியது. இந்த விபத்தில், காரில் இருந்த 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

லாரி எதிரே வந்த இருசக்கர வாகனம் மீது மோதி, சாலையோரத்தில் இருந்த மழைநீர் கால்வாய்க்குள் மாட்டிக் கொண்டது இதில் இருசக்கர வாகனம், கார் சேதமடைந்தது. அதில் இருந்த 4 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இதுகுறித்து தகவல் அறிந்த உதகை நகர மேற்கு பிரிவு போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், குடிபோதையில் லாரி டிரைவர் ஓட்டி விபத்தை ஏற்படுத்தியதாக தெரிகிறது. தப்பி ஓடிய டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர் இந்த விபத்தால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!