நீலகிரியில் ஹெத்தையம்மன் பண்டிகையொட்டி உள்ளூர் விடுமுறை

நீலகிரியில் ஹெத்தையம்மன் பண்டிகையொட்டி உள்ளூர் விடுமுறை
X

பைல் படம்.

நீலகிரி மாவட்டத்தில் ஹெத்தையம்மன் பண்டிகை நடைபெறும் நாளன்று அரசாணை படி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுகிறது.

நீலகிரி மாவட்டத்தில் ஹெத்தையம்மன் பண்டிகை நடைபெறும் நாளன்று அரசாணை படி நீலகிரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுகிறது. வருகிற 22-ம் தேதி ஹெத்தையம்மன் பண்டிகையை ஒட்டி மாவட்டத்தில் உள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுகிறது.

இந்த உள்ளூர் விடுமுறை நாள் சட்டம் 1881-ன் கீழ் வராது என்பதால் உள்ளூர் விடுமுறை அறிவிக்கும் போது மாவட்டத்தில் உள்ள கருவூலம் மற்றும் சார்நிலை கருவூலங்கள் அரசு பாதுகாப்புக்கான அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படும். அதற்கு பதிலாக வருகிற ஜனவரி 8-ந் தேதி சனிக்கிழமை மாவட்டத்தில் பணி நாளாக அறிவிக்கப்படுகிறது. இந்த தகவலை கலெக்டர் எஸ்.பி.அம்ரித் தெரிவித்து உள்ளார்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!