உள்ளாட்சி களேபரம்: அதிமுக கிளை செயலாளருக்கு சீட் கட்

உள்ளாட்சி களேபரம்: அதிமுக கிளை செயலாளருக்கு சீட் கட்
X

ராஜா மற்றும் அவரது மனைவி லட்சுமி. 

அதிமுகவில் சீட் மறுக்கப்பட்டதால் தனது மனைவியை சுயேச்சை வேட்பாளராக நிறுத்தி உள்ளாட்சித் தேர்தலை களம் காணப் போவதாக பேட்டி.

உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் தாக்கல் செய்ய இன்று இறுதி நாள் என்பதால் உதகை நகராட்சியில் உள்ள 36 வார்டுகளிலும், கட்சியினர் மட்டுமல்லாமல் சுயேச்சை வேட்பாளர்களும் வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றனர். இந்நிலையில் உதகை நகராட்சிக்குட்பட்ட முப்பத்தி மூன்றாவது வார்டில் கடந்த 60 ஆண்டு காலமாக அதிமுகவில் கிளைச் செயலாளராக இருந்தவர் ராஜா. இவருக்கு இந்த முறை நகரமன்ற உறுப்பினருக்கான வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.

இது தன்னை மிகுந்த வேதனை அடையச் செய்துள்ளதாகவும், இதனால் தனது மனைவியை லட்சுமி சுயேச்சை வேட்பாளராக நிறுத்தி உள்ளாட்சித் தேர்தலை களம் காணப் போவதாக கூறிய அவர், அதிமுகவில் காலங்காலமாக இருந்து வந்த தனக்கு இந்த நகராட்சி மன்ற உறுப்பினருக்கான வாய்ப்பு மறுக்கப்பட்டது மிகுந்த வேதனை அளிப்பதாக தெரிவித்தார்.

Tags

Next Story
ai marketing future