மிலாடி நபி: நீலகிரியில் அக். 19 ம் தேதி மதுபான கடைகள் மூடல்

மிலாடி நபி: நீலகிரியில் அக். 19 ம் தேதி மதுபான கடைகள் மூடல்
X
எதிர்வரும் 19 ம் தேதி மிலாடி நபியை முன்னிட்டு, மது விற்பனை செய்யக்கூடாது என, நீலகிரி கலெக்டர் எச்சரித்துள்ளார்.

வருகிற 19-ந் தேதி மிலாடி நபியை முன்னிட்டு, தமிழ்நாடு மதுபான (உரிமம் மற்றும் அனுமதி) விதிகளின்படி. நீலகிரி மாவட்டத்தில் டாஸ்மாக் சில்லறை விற்பனை கடைகள், கிளப்புகள், பார் ஓட்டல்கள் ஆகியவற்றில் எவ்வித மதுபானங்களும் விற்பனை செய்யப்பட மாட்டாது.

அன்றைய தினம் கட்டாயம் டாஸ்மாக் சில்லறை விற்பனை கடைகள், கிளப்புகள் பார் ஓட்டல்கள் அனைத்தும் மூடப்பட வேண்டும். இந்த உத்தரவை மீறி மதுபானங்கள் விற்பனை செய்யும் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என நீலகிரி கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
அறச்சலூா்: 200 மாணவர்களின் படைப்புகளுடன் அறிவியல் கண்காட்சி வெற்றிகரமாக முடிந்தது!