நீலகிரியில் கொரோனா 2 தவணை தடுப்பூசி செலுத்தியிருந்தால் மட்டுமே மதுவிற்பனை

நீலகிரியில் கொரோனா 2 தவணை தடுப்பூசி செலுத்தியிருந்தால் மட்டுமே மதுவிற்பனை
X

டாஸ்மாக் முன்பு ஒட்டப்பட்டிருக்கும் அறிவிப்பு.

நீலகிரி மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மட்டுமே இன்று முதல் மது விற்பனை செய்யப்படும்.

தமிழகத்தில் கொரோனா பரவல் கட்டுப்பாடுகள் தற்போது வரை இருந்துவரும் நிலையில் பொதுமக்கள் அதிகமாக வந்து செல்லும் இடங்களில் வழிகாட்டு நெறிமுறைகள் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக நீலகிரி மாவட்டத்தில் 97% பேர் தடுப்பு ஊசி செலுத்தி உள்ள நிலையில் மீதமுள்ள மூன்று சதவீதத்தினருக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதில் மது அருந்துபவர்கள் இதுவரை தடுப்பூசி செலுத்த அச்சம் தெரிவித்து வரும் நிலையில், இன்று முதல் நீலகிரி மாவட்டத்தில் இரண்டு தடுப்பூசி செலுத்தியதற்கான சான்று மற்றும் குறுந்தகவலை காண்பித்தால் மட்டுமே அவர்களுக்கு மது வழங்கப்படும் எனவும் இந்த அறிவிப்பின் மூலம் நீலகிரியில் 100 சதவிகிதம் தடுப்பூசி செலுத்தப்பட்டு முதன்மை மாவட்டமாக நீலகிரி திகழும் என ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்தார்.


Tags

Next Story
ai in future agriculture