உதகையில் 2 ம் நாளாக பொதுப்பணித் துறை அமைச்சர் ஆய்வு
நவீன தொழில்நுட்பத்தினால் நிலச்சரிவை தடுக்கும் மாதிரி திட்டத்தை அமைச்சர் வேலு தொடங்கி வைத்தார்
தமிழகத்தில் உதகை உள்ளிட்ட பல்வேறு மலைப்பகுதிகளில் மழை காலத்தில் ஏற்படும் நிலச்சரிவுகளால் உயிர் மற்றும் உடமைகளுக்கு ஏற்படும் இழப்பை தடுக்கும் விதமாக நவீன தொழில்நுட்பத்தினால் நிலச்சரிவை தடுக்கும் மாதிரி திட்டத்தை உதகையில் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ. வேலு தொடங்கி வைத்தார்.
புதுடில்லி இந்திய தொழில் நுட்ப கழகத்தின் தொழில் நுட்பத்துடன் மாநிலத்தில் முதன் முறையாக நீலகிரி மாவட்டத்தில் கோடப்பமந்து மற்றும் மரப்பாலம் ஆகிய இரு இடங்களில் இத்திட்டம் பரிசார்த்த அடிப்படையில் அறிமுகப்படுத்தப்படுவதாக கூறினார்.
மண் அரிமானம் ஏற்படும் அபாயகரமான இடங்களில் இந்த தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும் என்றும், இது வெற்றியடையும் பட்சத்தில் மாநிலத்தில் நிலச்சரிவு அபாயகரமான பகுதிகளாக கண்டறியப்பட்ட 4170 இடங்கள் இத்திட்டம் விரிவுபடுத்தப்படும் என்றும் இத்திட்டம் மண்ணின் தன்மையை உறுதிப்படுத்தும் வகையில் செயல்படுத்தப்படும் என்றும், இதன் செலவினமும் குறைவாக உள்ளதாக கூறினார்.
இந்த ஆய்வின்போது வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், நீலகிரி மாவட்ட ஆட்சியர் அம்ரித் உட்பட பலர் கலந்துக்கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu