கனமழையால் மண்சரிவு: உதகையில் அந்தரத்தில் தொங்கிய வீடுகள்

மண் சரிவு ஏற்பட்ட பகுதியில் நடைபாதை முற்றிலும் சேதம் அடைந்ததால் குடியிருப்புவாசிகள் வெளியே வர முடியாமல் தவித்தனர்.

உதகையில் நேற்று 5 மணி முதல் இடியுடன் கூடிய கன மழை இரவு 9 மணி வரை கொட்டி தீர்த்தது. இதனால் நகரில் பல பகுதிகளில் மழைநீர் வெள்ளத்தால் சேதங்கள் ஏற்பட்டன. உதகையில் மட்டும் 98 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இந்த கனமழையால் உதகை நகரிலுள்ள குமரன் நகர் பகுதியில் மண் சரிவு ஏற்பட்டு வீடுகள் அந்தரத்தில் தொங்கியது. மண்சரிவு ஏற்படும் முன் வீடுகளில் இருந்த பொதுமக்கள் உடனடியாக வெளியேறி உயிர் தப்பினர். இதில் வீடுகளில் இருந்த பொருட்கள் முற்றிலும் சேதமடைந்தது.

மண் சரிவு ஏற்பட்ட பகுதியில் நடைபாதையும் முற்றிலும் சேதம் அடைந்ததால் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்புவாசிகள் வெளியே வர முடியாமல் தவித்தனர். ஒவ்வொரு முறையும் கனமழை பெய்யும் பொழுது இப்பகுதியில் மண்சரிவு ஏற்பட்டு வருவதாகவும், உயிர்ச்சேதம் ஏற்படும் முன் இப்பகுதியில் தடுப்புச் சுவர் எழுப்பி பொதுமக்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!