கோடநாடு வழக்கு விசாரணை மார்ச் 25 க்கு ஒத்திவைப்பு

உதகை கோர்ட்டில் கோடநாடு வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. மாவட்ட முதன்மை நீதிபதி சஞ்சய் பாபா விசாரித்தார். சயான், மனோஜ் இருவரும் கோர்ட்டில் ஆஜராகினர். நிபந்தனை ஜாமீனில் உள்ள கனகராஜ் அண்ணன் தனபால், ரமேஷ் தரப்பில் நிபந்தனை ஜாமீனில் தளர்வு கோரி உதகை கோர்ட்டில் மனுதாக்கல் செய்தனர்.
நிபந்தனை ஜாமீனில் தளர்வு அளிக்கக்கூடாது என்று அரசு சிறப்பு வக்கீல் ஷாஜகான் எதிர்ப்பு தெரிவித்தார். வழக்கு விசாரணை வரும் 25.03.2022 அன்று தள்ளி வைக்கப்பட்டது. இதுகுறித்து அரசு சிறப்பு வக்கீல் ஷாஜகான் நிருபர்களிடம் கூறும்போது, கோடநாடு வழக்கு குறித்து இதுவரை 180 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டு உள்ளது. மின்னணு ஆதாரங்கள், தொலைத்தொடர்பு விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது. ஒரு தொலைபேசியில் இருந்து மற்ற தொலைபேசிகளுக்கு அழைக்கப்பட்ட விவரங்கள் பெறுவது சிரமமாக இருக்கிறது. தனபால், ரமேஷ் 2 செல்போன்களை எரித்தனர். இருவரும் தலைமறைவாக கூடாது, சாட்சிகளை திசை திருப்பக்கூடாது, களைக்கக்கூடாது என்பதற்காக நிபந்தனை ஜாமீன் விதிக்கப்பட்டு உள்ளது. அவர்களுக்கு ஜாமீனில் தளர்வு அளித்தால் விசாரணை பாதிக்கும் என்றார் இதனால் தளர்வு கோரிய மனு தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
Tags
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu