உதகையில் கொட்டும் மழையில் பத்திரிக்கையாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

உதகையில் கொட்டும் மழையில் பத்திரிக்கையாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
X

நீலகிரி ப்ரஸ் க்ளப் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம்.

தொலைக்காட்சி மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்து நீலகிரி ப்ரஸ் க்ளப் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம்.

சத்தியம் தொலைக்காட்சி மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்து, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகிறது. சத்தியம் தொலைக்காட்சி மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய நபரை கண்டித்து உதகையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் நீலகிரி பத்திரிகையாளர் சங்கத்தின், ஊட்டி பத்திரிகையாளர் சங்கம் மற்றும் பல சங்கங்கள் இணைந்து சங்க தலைவர் ஆன்டனி தலைமையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மேலும் தாக்குதலில் ஈடுபட்ட நபரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யக் கோரியும், பத்திரிகையாளர்களுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்க கோரியும் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு வழங்கப்பட்டது. இந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள், உறுப்பினர்கள் உட்பட பத்திரிகையாளர்கள் பலர் கலந்து கொண்டனர். மேலும் தாக்குதலில் ஈடுபட்ட நபரை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.

Tags

Next Story
Weight Loss Tips In Tamil