நீலகிரி அரசு ஐடிஐ மாணவர் சேர்க்கை : வரும் 30 -ஆம் தேதி வரை நீட்டிப்பு

நீலகிரி  அரசு  ஐடிஐ மாணவர் சேர்க்கை :  வரும் 30 -ஆம் தேதி வரை நீட்டிப்பு
X

பைல் படம்

இந்த வாய்ப்பை பயன்படுத்தி உப்பட்டியில் உள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் பழங்குடியின மாணவர்கள் சேரலாம்

நீலகிரி மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் நடப்பாண்டிற்கான நேரடி மாணவர் சேர்க்கை வருகிற 30-ந் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

14 வயது பூர்த்தி அடைந்த ஆண்கள், பெண்கள் இருபாலரும் விண்ணப்பிக்கலாம். அதில், ஆண்களுக்கு அதிகபட்ச வயது வரம்பு 40. பெண்களுக்கு வயது வரம்பு இல்லை. குன்னூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் பொருத்துநர், கடைசலர், கம்மியர் ஆகிய ஈராண்டு தொழிற்பிரிவுகளுக்கும், 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் கம்பியாள் இரண்டாண்டு தொழிற்பிரிவுக்கும், தச்சர் மற்றும் பற்ற வைப்பவர் ஆகிய ஓராண்டு தொழிற்பிரிவுகளுக்கும் அனைத்து பிரிவினை சார்ந்த மாணவர்கள் பயிற்சியில் சேரலாம்.மேலும், பழங்குடியினருக்காக இயங்கும் உப்பட்டி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவ- மாணவிகள் சேரலாம்.

இதுகுறித்த மேலும் விவரங்களுக்கு 0423-2231759, 0426-2263449 என்ற தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம் என்று மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!