தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள்: நீலகிரி கலெக்டர் ஆய்வு

நீலகிரியில், கொரோனா தொற்று 400 க்கும் மேல் கண்டறியப்பட்ட நிலையில், தனிமைpபடுத்தப்பட்ட பகுதிகளை ஆட்சியர் ஆய்வு செய்தார்.

நீலகிரி மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகமாகி வருகிறது. நேற்று ஒரே நாளில் 400க்கும் மேற்பட்டோருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

இதையடுத்து, உதகை நகரில் தொற்று கண்டறியப்பட்ட பகுதிகளில் உதகமண்டலம் நகராட்சி சார்பில் முழுவீச்சில் தூய்மை பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா, கொரோனா தொற்று அதிகமுள்ள பகுதிகளை பார்வையிட்டு பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது உதகமண்டலம் நகராட்சி ஆணையாளர் சரஸ்வதி மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

Tags

Next Story