நீலகிரி விவசாயிகள் அனுபோக சான்றுக்கு விண்ணப்பிக்க அழைப்பு: மாவட்ட கலெக்டர்
நீலகிரி கலெக்டர் எஸ்.பி.அம்ரித்.
பயிர் கடனுக்கான விண்ணப்பத்துடன் அனுபோக சான்று பெறும் விண்ணப்பத்தையும் அளித்து விவசாயிகள் பயனடையலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து நீலகிரி கலெக்டர் எஸ்.பி.அம்ரித் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில், நீலகிரியில் பயிர்கடன் கோரும் விவசாயிகள் விண்ணப்பத்துடன் கணினி சிட்டாவில் தங்களது பெயர் உள்ள விவசாயிகள், கணினி சிட்டாவில் பெயர் இல்லாதவர்கள் (தங்களது தந்தையின் பெயரோ அல்லது மூதாதையரின் பெயரோ உள்ள கூட்டு சிட்டா நகல்), குத்தகை அடிப்படையில் விவசாயம் மேற்கொள்ளும் விவசாயிகள் (தனிநபர் விவசாயம் கடன் பெற) அனுபோக சான்று தேவைப்படும் நேர்வில் குத்தகை ஒப்பந்தத்துடன் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்ப படிவத்துடன் ஆதார் அட்டை, கணினி சிட்டா நகலுடன் அருகே உள்ள தொடக்க கூட்டுறவு கடன் சங்கங்களில் உள்ள பொது சேவை மையத்தை தொடர்பு கொள்ளலாம்.
விவசாயிகளிடம் இருந்து பெறப்படும் பயிர் கடன் விண்ணப்பங்களை பரிசீலனை செய்யும் அதே நேரத்தில், அனுபோக சான்று விண்ணப்பங்களை உடனுக்குடன் சம்பந்தப்பட்ட கூட்டுறவு சங்க செயலாளர்கள் மூலம் சங்கத்தில் செயல்படும் பொது சேவை மையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு, அதன் நகல் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு அன்றைய தினம் அனுப்பப்படும். விண்ணப்பங்கள் பெறப்பட்டு உடன் கிராம நிர்வாக அலுவலர்கள் நேரில் களஆய்வு மேற்கொண்டு உரிய பரப்பளவினை கணினியில் பதிவேற்றம் செய்து சம்பந்தப்பட்ட தாசில்தார்களுக்கு அனுப்பி 7 நாட்களுக்குள் தாசில்தார்களிடம் இருந்து அனுபோக சான்று கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
எனவே, விவசாயிகள் தொடக்க கூட்டுறவு சங்கங்களை தொடர்புகொண்டு பயிர் கடனுக்கான விண்ணப்பத்துடன் அனுபோக சான்று பெறும் விண்ணப்பத்தையும் அளித்து பயனடையலாம் என்று தெரிவித்து உள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu