உதகையில் உழவர் பாதுகாப்பு திட்டத்தில் சேர அழைப்பு
பைல் படம்.
முதலமைச்சரின் உழவர் பாதுகாப்பு திட்டம்-2011 திட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட உறுப்பினர்களின் விவரங்கள் கிராம நிர்வாக அலுவலர்களால் பதிவேடுகளில் பராமரிக்கப்பட்டு வருகிறது. தற்போது நீலகிரி மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட குடும்ப தலைவர்கள் 1,67,952 நபர்களும் அவர்களை சார்ந்துள்ள உறுப்பினர்களில் 2,47,774 நபர்கள் உள்ளனர்.
மேற்கண்ட பதிவு செய்யப்பட்ட நபர்களின் ஆதார் எண், குடும்ப அட்டை எண் ஆகிய ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ள பதிவேட்டு விவரங்களுடன் சரிபார்க்கப்படும். அதில் விடுப்பட்டுள்ள அனைத்து விவரங்களையும் NIC Portal Database மூலம் இணையதளத்தில் பதிவு செய்யப்பட உள்ளதால் தற்போது அதற்கான விவரங்களை சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் மூலம் சேகரித்து தயார் நிலையில் வைத்து இருக்குமாறு அரசால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எனவே, மேற்கண்ட விடுப்பட்ட விவரங்கள் தொடர்பாக பொதுமக்கள் அனைவரும் தங்கள் வருவாய் கிராமத்தின் கீழ் வரும் கிராம நிர்வாக அலுவலகத்தில் கிராம நிர்வாக அலுவலர்களை தொடர்பு கொண்டு தங்களின் உழவர் பாதுகாப்பு அட்டை, ஆதார் அட்டை மற்றும் குடும்ப அட்டை ஆகிய விவரங்களை 31.03.2022 ற்குள் பதிவேற்றம் செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu