இணையதள பண மோசடி: நீலகிரி மாவட்ட காவல் துறையில் முக்கிய அறிவிப்பு

இணையதள பண மோசடி: நீலகிரி மாவட்ட காவல் துறையில் முக்கிய அறிவிப்பு
X

பைல் படம்.

இணையதள பண மோசடி தொடர்பாக நீலகிரி மாவட்ட காவல் அலுவலகத்தில் இயங்கி வரும் சைபர் கிரைம் காவல் நிலையத்தை அணுகி புகார் தெரிவிக்கலாம்

நீலகிரி மாவட்டத்தில் தற்போது அதிகமான படித்த இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் இணையதளம் மற்றும் இன்ஸ்டாகிராம் வழியாக வரும் வேலை தொடர்பான அறிவிப்புகள் மற்றும் பொய்யான செய்திகளை நம்பி அவர்களது வங்கி கணக்கு மூலம் பணத்தினை அந்த இணையதள முகவரிக்கு அனுப்பிவிடுகின்றனர்.

இதனை அந்த இணையதள முகவரிதாரர்கள் அவர்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு மேலும் பணத்தை இது போன்ற மாணவர்கள், பொதுமக்களிடமிருந்து ஏமாற்றி பறிக்கின்றனர்.

மேலும் நேரடியாகவும் சிலர் தங்களுக்கு அரசாங்கத்தில் உள்ள முக்கியஸ்தர்களை தெரியும் என்று கூறியும் அரசாங்கத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி ஒரு தொகையை பெற்று ஏமாற்றி விடுகின்றனர்.

எனவே படித்த இளைஞர்கள் மற்றும் பொது மக்கள் அது போன்ற இணையதளத்தையோ ஏமாற்றுபவர்களையோ நம்ப வேண்டாம் என காவல்துறை சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறது.

அவ்வாறு இணையதளம் மூலமாக தங்களை தொடர்பு கொள்பவர்களைப் பற்றி நீலகிரி மாவட்ட காவல் அலுவலகத்தில் இயங்கி வரும் சைபர் கிரைம் காவல் நிலையத்தை அணுகி புகார் தெரிவிக்கலாம் என காவல் துறை தெரிவித்துள்ளது.

Tags

Next Story
Sudden Halt in Pongal Package Distribution at Erode East Ration Shops..!