நீலகிரியில் உள்ளாட்சி தேர்தலுக்கான பணிகள் தீவிரம்
வாக்குப்பதிவு இயந்திரத்தை சரிபார்க்கும் எஞ்ஜினியர்கள் .
நீலகிரி மாவட்டத்தில் விரைவில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. 11 பேரூராட்சிகளில் தேர்தலுக்கான ஆயத்த பணிகள் நடந்து வருகின்றன. அதன் ஒரு பகுதியாக கடந்த 13-ந் தேதி முதல் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களின் செயல்பாடு தன்மையை உறுதிப்படுத்த 8 என்ஜினியர்கள் அடங்கிய குழு எந்திரங்களை சரிபார்க்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது.
பாரத் எலக்ட்ரானிக் லிமிடெட் நிறுவனத்தில் இருந்து என்ஜினியர்கள் 8 பேர் வந்து உள்ளனர். உதகையில் உள்ள கேரளா கிளப்பில் போலீஸ் பாதுகாப்புடன் வைக்கப்பட்ட எந்திரங்களை முதல் கட்ட ஆய்வு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த ஆய்வு பணியை கலெக்டர் (பொறுப்பு) கீர்த்தி பிரியதர்ஷினி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இதுகுறித்து கலெக்டர் பொறுப்பு கீர்த்தி பிரியதர்ஷினி கூறும்போது, நீலகிரியில் 600 வாக்குபதிவுக்கான கட்டுப்பாட்டு கருவிகள், 1,200 வாக்குப்பதிவு எந்திரங்கள் என்ஜினியர்கள் குழு சரிபார்த்து வருகிறது. முதல் கட்ட ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட எந்திரங்களில் 309 கட்டுப்பாட்டு கருவிகள், 485 வாக்குப்பதிவு எந்திரங்கள் சரிபார்க்கப்பட்டது.
இதில் 10 கட்டுப்பாட்டு கருவிகள், 11 வாக்குப்பதிவு எந்திரங்கள் பழுதடைந்து இருப்பது கண்டறியப்பட்டு, தனியாக வைக்கப்பட்டது. எந்திரங்கள் சரிபார்க்கும் பணியை துரிதமாக முடித்து வருகிற 22-ம் தேதிக்குள் அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் மாதிரி தேர்தல் நடத்த பாரத் எலக்ட்ரானிக் நிறுவனம் பொறியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது என்றார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu