வாக்குச்சாவடிகளுக்கு கொண்டு செல்லும் பொருட்கள் தயார்படுத்தும் பணி தீவிரம்

வாக்குச்சாவடிகளுக்கு கொண்டு செல்லும் பொருட்கள் தயார்படுத்தும் பணி தீவிரம்
X

உதகை நகராட்சியில் தேர்தல் பொருட்களை பிரித்து அடுக்கும் பணி அலுவலக கவுன்சில் அரங்கில் நடைபெற்றது.

நீலகிரி மாவட்டத்தில் வாக்குச்சாவடிகளுக்கு கொண்டு செல்லும் பொருட்கள் தயார்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

நீலகிரி மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு வாக்காளர்கள் வாக்களிக்க 406 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளது.

4 நகராட்சிகள், 11 பேரூராட்சிகளில் உள்ள வாக்குச்சாவடிகளுக்கு 491 வாக்குப்பதிவு எந்திரங்கள், 491 கட்டுப்பாட்டு எந்திரங்கள் ஒதுக்கப்பட்டது.

வாக்குப்பதிவு எந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர், சின்னம் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது.

உதகை நகராட்சியில் மொத்தம் உள்ள 82 வாக்குச்சாவடிகள் வாரியாக தேர்தல் பொருட்களை பிரித்து அடுக்கும் பணி அலுவலக கவுன்சில் அரங்கில் நடைபெற்றது.

தேர்தலுக்கு தேவையான பொருட்கள் தரையில் குறிக்கப்பட்ட வாக்குச்சாவடி என் வரிசையில் அடுக்கி வைக்கப்பட்டது.

வாக்குச்சாவடி தலைமை அலுவலர் தேர்தல் விவர குறிப்பேடு, முகவர்களுக்கு நுழைவு அனுமதி சீட்டு, அழியாத மை குப்பிகள், பென்சில், குண்டூசிகள், முத்திரை அரக்கு உள்பட 80 பொருட்கள் தேர்தலுக்கு பயன்படுத்தப்படுகிறது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!