உதகையில் தூய்மை பணிகள் தீவிரம்: மார்க்கெட்டை சுத்தம் செய்த நகராட்சி ஊழியர்கள்

உதகையில் தூய்மை பணிகள் தீவிரம்: மார்க்கெட்டை சுத்தம் செய்த நகராட்சி ஊழியர்கள்
X

உதகை மார்க்கெட்டை சுத்தம் செய்யும் நகராட்சி ஊழியர்கள்.

முழு ஊரடங்கு காரணமாக உதகை மார்க்கெட்டை நகராட்சி ஊழியர்கள் தண்ணீர் மூலம் முழுமையாக தூய்மைபடுத்தினர்.

உதகை நகராட்சி மார்க்கெட்டில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன முழு ஊரடங்கு காரணமாக நகராட்சி நிர்வாகம் சார்பில் நகரில் பல பகுதிகளில் தூய்மை பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது.

இன்று முழு ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில் நகராட்சி நிர்வாகம் சார்பில், உதகை மார்க்கெட் பகுதி தண்ணீர் மூலம் முழுமையாக தூய்மைப்படுத்தும் பணியில் நகராட்சி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் ஈடுபட்டனர்.

இதுமட்டுமல்லாமல் கனரக வாகனங்களில் நகர் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கும் பணியிலும் நகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!