உதகை பூங்காவில் மலர் கண்காட்சிக்கான ஆயத்த பணிகள் தீவிரம்

உதகை பூங்காவில் மலர் கண்காட்சிக்கான ஆயத்த பணிகள் தீவிரம்
X

மலர் கண்காட்சிக்கான பணிகளில் ஈடுபட்டுள்ள பூங்கா ஊழியர்.

உதகை பூங்காவில் மலர்க் கண்காட்சிக்கான ஆயத்த பணிகளில் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

உதகை அரசு தாவரவியல் பூங்காவில் வரும் மே மாதம் நடைபெறவுள்ள வருடாந்திர மலர்க் காட்சிக்கான ஆயத்த பணிகள் தற்போது துரிதமாக நடைபெற்று வருகின்றன.

சுமார் 25 ஏக்கர் பரப்பில் பரந்துள்ள பூங்காவில் உள்ள மலர் பாத்திகளில் ஒன்றறை லட்சத்திற்கு மேலானா மலர் செடிகள் நடவு செய்யும் பணி நிறைவு பெற்றதையடுத்து, தற்போது மலர் மாடத்தில் காட்சிப்படுத்த 50 ஆயிரத்திற்கு மேலான பூந்தொட்டிகளில் மலர் செடிகள் நடவு செய்யும் பணி துரிதமாக மேற்கொள்ளப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.

இதில் கார்னேஷன், லில்லியம் அந்தூரியம் , பிளாக்ஸ், பெட்டுனியா, கேலண்டுலா, ஆஸ்டர், சால்வியா மேரிகோல்டு உள்பட 150க்கும் மேற்பட்ட மலர் ரகங்கள் இந்த மலர் தொட்டிகளில் நடவு செய்யப்பட்டு பனியினால் மலர் செடிகள் பாதிக்காத வகையில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

மலர் தொட்டிகளில் நடவு செய்யும் பூக்கள் மே மாதம் முதல் வாரத்தில் பூக்கின்ற வகையில் நீர்ப்பாய்ச்சி, உரமிட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன. கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பெருந்தொற்று காரணமாக மலர் காட்சி நடைபெறாத நிலையில் தற்போது ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் இந்த ஆண்டு நிச்சயமாக மலர் காட்சி நடைபெறும் என்ற எதிர்பார்ப்பில் பூங்கா ஊழியர்கள் மலர்க்காட்சிக்கான ஆயத்த பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!