முன்னாள் அதிமுக எம்பி ஜாமீன் மனு மீதான விசாரணை
பைல் படம்.
நீலகிரி மாவட்டம் குன்னுரை சேர்ந்த அதிமுக முன்னாள் எம்.பி. கோபாலகிருஷ்ணன் கடந்த 4-ந் தேதி தீபாவளி பண்டிகை அன்று இரவில் குடிபோதையில் ஆடையின்றி முத்தாளம்மன் கோவில் தெரு பகுதியில் உள்ள உறவினரான கோபி (47) என்பவரது வீட்டுக்குள் இருந்தார்.
இதனால் ஆத்திரமடைந்த கோபி வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவரை தாக்கியதாக தெரிகிறது. இதுதொடர்பாக குன்னூர் போலீசார் கோபாலகிருஷ்ணன், கோபி மீது வழக்குப்பதிவு செய்தனர். இதற்கிடையே நீலகிரி மாவட்ட நீதிமன்றத்தில் அதிமுக முன்னாள் எம்.பி. கோபாலகிருஷ்ணன், கோபி மகன் ஆகிய 2 பேர் தரப்பிலும் முன் ஜாமீன் வழங்கக்கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.
உதகை கோர்ட்டில் மனு விசாரணைக்கு வந்தது. மாவட்ட முதன்மை நீதிபதி சஞ்சய் பாபா மனுவை விசாரித்தார். காவல்துறை தரப்பில் கோபாலகிருஷ்ணன் மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் ஆகி தலைமறைவாக இருந்து வருகிறார். முன்னாள் எம்.பி. என்பதால் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி சாட்சிகளை கலைத்து வழக்கின் புலன் விசாரணைக்கு குந்தகம் ஏற்படக்கூடும் என்பதால் அவருக்கு முன்ஜாமீன் வழங்க கூடாது என்று கடும் ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டது.
அதேபோல் கோபி மகன் கிஷோருக்கும் முன்ஜாமீன் வழங்க காவல்துறை தரப்பில் ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து மாவட்ட மனு மீதான விசாரணை நாளை மறுநாள் (புதன்கிழமை) ஒத்தி வைக்கப்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu