உதகையில் நியாயவிலைக் கடை பணியாளர்களுக்கு புத்தாக்க பயிற்சி

உதகையில் நியாயவிலைக் கடை பணியாளர்களுக்கு புத்தாக்க பயிற்சி
X

நீலகிரி மாவட்டத்தில் நியாயவிலைக் கடை பணியாளர்களுக்கான புத்தாக்க பயிற்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெ.இன்னசென்ட் திவ்யா துவக்கி வைத்தார்.

நியாயவிலைக் கடை பணியாளர்களுக்கான புத்தாக்க பயிற்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெ.இன்னசென்ட் திவ்யா துவக்கி வைத்தார்.

நீலகிரி மாவட்டத்தில், கூட்டுறவுத்துறையின் சார்பில், பொது விநியோகத்திட்டத்தினை சிறப்பாக நடைமுறைப்படுத்துவதற்காக நியாயவிலைக் கடை பணியாளர்களுக்கான புத்தாக்க பயிற்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெ.இன்னசென்ட் திவ்யா துவக்கி வைத்தார்.

நீலகிரி மாவட்டம் நீலகிரி கூட்டுறவு விற்பனை சங்க திருமண மண்டபத்தில், கூட்டுறவுத்துறையின் சார்பில், பொது விநியோகத் திட்டத்தினை சிறப்பாக நடைமுறைப்படுத்துவதற்காக நியாயவிலைக் கடை பணியாளர்களுக்கான புத்தாக்க பயிற்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெ.இன்னசென்ட் திவ்யா இன்று துவக்கி வைத்தார்.

பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது: நீலகிரி மாவட்டத்தில் கூட்டுறவுத்துறை சார்பில் இன்று பொது விநியோகத் திட்டத்தினை சிறப்பாக நடைமுறைப்படுத்துவதற்காக நியாயவிலைக்கடை பணியாளர்களுக்கான புத்தாக்க பயிற்சி அளிக்கப்படுகிறது. மதிப்பிற்குரிய தலைமைச்செயலர் அவர்கள் நாம் பணியாற்றும் பணியிடங்களை சுத்தமாக வைத்துக் கொண்டால் தான் நமது மனம் சுத்தமாக இருக்கும் என தெரிவித்துள்ளார்கள்.

அதனடிப்படையில் இன்று நடைபெறும் பயிற்சியில் நியாயவிலைக் கடையில் பணியாற்றும் பணியாளர்களுக்கு நியாயவிலைக் கடையை சுத்தமாக பராமரித்தல், முக்கிய விளம்பர பலகைகள் காட்சிப்படுத்துதல் தினசரி விற்பனை தொகையினை செலுத்துதல், முதலில் பெறப்பட்ட பொருட்களை முதலில் விநியோகம் செய்தல், காலாவதியான பொருட்களை மாற்றுதல், காலாவதியான பொருட்களை நுகர்வோருக்கு அளிப்பதால் ஏற்படும் பாதிப்பு, குடும்ப அட்டைதாரர்களின் சேவை, சிறந்த முறையில் விற்பனையாளராக திகழ செய்வது, யோகா, சாதன மூச்சுபயிற்சி, உடற்பயிற்சி, விற்பனையாளர்களின் முக்கியத்துவம் போன்றவற்றைக் குறித்து இன்று ஒருநாள் முழுவதும் தங்களுக்கு பயிற்சிகள் அளிக்கப்படுகிறது.

இந்த பயிற்சி வகுப்பினை நீங்கள் நல்ல முறையில் பயன்படுத்தி கொண்டு ஏதேனும் சந்தேகம்இருந்தால் உடனடியாக கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும். நீலகிரி மாவட்டத்தை பொறுத்தவரை தகுதியானவர்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும். கொரோனா தொற்று நோய் முழுவதுமாக முடிவடையவில்லை. கொரோன தொற்று எளிதில் பரவக்கூடிய நோயாகும். எனவே அனைவரும் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும் மாவட்ட ஆட்சியர் கேட்டுக் கொண்டார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!