உதகையில் 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை பணியாளர்கள் நூதன ஆர்ப்பாட்டம்

உதகையில் 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை பணியாளர்கள் நூதன ஆர்ப்பாட்டம்
X

உதகையில் நீலகிரி கோட்ட பொறியாளர் அலுவலகம் முன்பு சாலை பணியாளர்கள் சங்கம் சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.

நெடுஞ்சாலை துறையில் கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்க வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பி வலியுறுத்தப்பட்டது.

நெடுஞ்சாலைகளை பராமரிக்க 5 கிலோ மீட்டருக்கு 2 சாலை பணியாளர்கள் பணியிட ஒப்புதல் வழங்கி கிராமப்புற இளைஞர்களுக்கு பணி வழங்க வேண்டும், 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்தி பணப்பலன்கள் வழங்க வேண்டும் என்பது உள்பட 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்கள் சங்கம் சார்பில் உதகையில் நீலகிரி கோட்ட பொறியாளர் அலுவலகம் முன்பு மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்தில் சாலைப் பணியாளர்களுக்கு தொழில்நுட்ப கல்வித்திறன் பெறாத ஊழியருக்கான ஊதியம் கணக்கிட்டு வழங்க வேண்டும். உயிரிழந்தவரின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணி நியமனம் கோரி விண்ணப்பித்து காத்திருப்பவர்களுக்கு நெடுஞ்சாலை துறையில் கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்க வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பி வலியுறுத்தப்பட்டது.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!