புலன் விசாரணை அதிகாரிகளுக்கு தடயவியல் குறித்த வகுப்புகள் துவக்கம்

புலன் விசாரணை அதிகாரிகளுக்கு தடயவியல் குறித்த வகுப்புகள் துவக்கம்
X

தடயவியல் பயிற்சி வகுப்பில் கலந்து கொண்ட அதிகாரிகள்.

புலன் விசாரணை அதிகாரிகளுக்கு தடயவியல் தொடர்பான பயிற்சி வகுப்புகள் உதகையில் உள்ள பழைய போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடைபெற்றது.

நீலகிரி மாவட்டத்தில் பணிபுரிந்து வரும் புலன் விசாரணை அதிகாரிகளுக்கு தடயவியல் தொடர்பான பயிற்சி வகுப்புகள் உதகையில் உள்ள பழைய போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடைபெற்றது. கோவை மாவட்ட தடயவியல் நிபுணர்கள் முனிராஜ், வேல்முருகன் ஆகியோர் தலைமையில் நீலகிரி மாவட்ட போலீஸ் அதிகாரிகளுக்கு தடயவியல் சோதனை சம்பவ இடத்தில் பதிவான கை ரேகைகள், பிற பொருட்களை பதிவு செய்வது, அதனை ஒப்பிட்டு பார்த்து குற்றவாளிகளை கண்டறிவது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் போலீஸ் அதிகாரிகள் தங்களது சந்தேகங்களை கேட்டு தெரிந்து கொண்டனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!