உதகை 31 வது வார்டில் சுயேச்சை வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பு

உதகை 31 வது வார்டில் சுயேச்சை வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பு
X

சுயேச்சை வேட்பாளர் சூரியகலா வாக்கு சேகரித்தார். 

உதகை 32 வது வார்டில் போட்டியிடும் சூரியகலா, நூலகம் ஏற்படுத்தி தருவதாக வாக்குறுதி அளித்துள்ளார்.

உள்ளாட்சி நகர்புற தேர்தல் பிப்ரவரி 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக கட்சியினர் மட்டுமல்லாமல் சுயேச்சையாக போட்டியிடும் வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். உதகையில் உள்ள 36 வார்டுகளிலும் அனைத்து வேட்பாளர்களும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இவர்களில், உதகை நகரில் உள்ள 32-வது வார்டு பகுதியில் சுயேச்சையாக போட்டியிடும் சூரியகலா என்பவர் இப்பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு முக்கிய அடிப்படை தேவைகளான குடிநீர் பிரச்சனை, பாதாள சாக்கடை, மழைநீர் கால்வாய், தடுப்புச்சுவர், நூலகம் ஏற்படுத்தித்தர பாடுபடுவேன் என தெரிவித்துள்ளார். வாசிப்புக்கு முக்கியத்துவம் தரும் நூலகம் அமைத்துத் தரப்படும் என்ற அவரது வாக்குறுதி, பலரின் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

Tags

Next Story
why is ai important to the future