ஊட்டி அருகே கேத்தி பேரூராட்சியில் வளர்ச்சி திட்ட பணிகள் துவக்கி வைப்பு
மரக்கன்று நட்டினார் அமைச்சர் ராமச்சந்திரன்.
ஊட்டி அருகே உள்ள கேத்தி மற்றும் சோலூா் பேரூராட்சி பகுதிகளில் பல்வேறு வளா்ச்சிப் பணிகளை சுற்றுலாத்துறை அமைச்சா் ராமசந்திரன் தொடங்கி வைத்தாா்.
நீலகிரி மாவட்டத்தில் நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை சாா்பில் சோலூா் மற்றும் கேத்தி பேரூராட்சி பகுதிகளில் கலைஞா் நகா்ப்புற மேம்பாட்டுத் திட்டம், சிறப்பு பகுதி மேம்பாட்டுத் திட்டம் மூலமாக ரூ. 1.11 கோடி மதிப்பில் கெரடா கெங்குந்தை சாலை அமைத்தல், நீா்கம்பை மயானத்துக்கு நடைபாதைக்கான கல்வெட்டு அமைத்தல், பழங்குடியின தோடா் காலனியில் நடைபாதை அமைத்தல், முக்கட்டியில் சாலை மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு திட்டப் பணிகளை அமைச்சா் ராமசந்திரன் தொடங்கிவைத்தாா்.
சிறப்பு மேம்பாட்டுத் திட்டம், தூய்மை இந்தியா திட்டம், தமிழ்நாடு நகா்ப்புற சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் புதிய நியாய விலைக் கடை, பொதுக் கழிப்பிடம், சாலை பலப்ப டுத்துதல், சாலையில் வடிகால் அமைத்தல், தடுப்புச் சுவா் அமைத்தல், நீா்த்தேக்க தொட்டி அமைத்தல் என மொத்தம் ரூ.96 லட்சம் மதிப்பிலான வளா்ச்சிப் பணிகளை தொடங்கி வைத்தாா்.
மேலும், கேத்தி பேரூராட்சியில் புனரமைக்கப்பட் வளம் மீட்பு பூங்காவை திறந்து வைத்தாா். திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை மறுசுழற்சி செய்து மண்புழு உரமாக மாற்றி விவசாயிகளுக்கு வழங்கும் திட்டமும் இப்பூங்காவில் நடைமுறை படுத்தப்பட்டது. இதனை அமைச்சா் ராமச்சந்திரன் திறந்துவைத்து பாா்வையிட்டாா்.
பின்னா் அவா் நிருபர்களிடம் கூறுகையில், கடந்த இரண்டு ஆண்டுகளில் நீலகிரி மாவட்டம் கேத்தி பேரூராட்சியில் ரூ.8 கோடி மதிப்பீட்டில் பல்வேறு வளா்ச்சித்திட்டங்களும், சோலூா் பேரூராட்சியில் ரூ.11 கோடி மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தாா். நிகழ்ச்சியில் குன்னூா் கோட்டாட்சியா் பூஷண குமாா், கேத்தி பேரூராட்சி செயல் இயக்குநா் நடராஜ் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனா்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu