உதகையில் சிஐடியு சார்பில் உண்ணாவிரதப் போராட்டம்

உதகையில் சிஐடியு  சார்பில் உண்ணாவிரதப் போராட்டம்
X

உதகை மத்திய பஸ் நிலையம் முன்பு சிஐடியு போக்குவரத்து தொழிற்சங்கம் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

மத்திய பஸ் நிலையம் முன்பு சிஐடியு போக்குவரத்து தொழிற்சங்கம் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

போக்குவரத்து கழகங்களின் பற்றாக்குறையை ஈடுகட்ட வரவிற்கும், செலவிற்குமான வித்தியாச தொகையை அரசு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கி வழங்க வேண்டும். தொழிலாளர்களுக்கு ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனே தொடங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி உதகை மத்திய பஸ் நிலையம் முன்பு சிஐடியு போக்குவரத்து தொழிற்சங்கம் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

போராட்டத்துக்கு உதகை கிளை செயலாளர் ரமேஷ் தலைமை தாங்கினார். போராட்டத்தில் ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர்களுக்கு பணப்பலன்கள், அகவிலைப்படி உயர்வு, மருத்துவ காப்பீடு அமல்படுத்த வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி நிர்வாகிகள் பேசினர்.

Tags

Next Story
பெருந்துறையில் புகையிலை விற்பனைக்கு எதிராக கடைகளுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்