உதகையில் மனித உரிமைகள் பாதுகாப்பு கழகம் சார்பில் விருது வழங்கல்

கொரோனோ காலத்தில் சிறந்து பணியாற்றியவர்களுக்கு, உதகையில் மனித உரிமைகள் பாதுகாப்பு கழகம் சார்பில் விருதுகள் வழங்கப்பட்டன.

நீலகிரி மாவட்டம் உதகையில், மக்கள் உரிமைகள் பாதுகாப்புக் கழகம் சார்பில், கொரோனோ காலகட்டத்தில் சிறந்து பணியாற்றியவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. உதகை பஞ்சாயத்து அலுவலகம் பகுதியில் நடந்த விழாவில், மக்கள் உரிமைகள் பாதுகாப்புக் கழகத்தின் மாநில தலைவர் டாக்டர் பாலசுப்பிரமணியம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.

கொரோனா காலகட்டத்தில் பணிகளில் ஈடுபட்ட செவிலியர்கள், பல்வேறு சமூகப் பணிகளில் ஈடுபட்ட தன்னார்வலர்கள், ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள், உட்பட பலருக்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டு, அவர்களுக்கு கேடயமும் சான்றும் வழங்கப்பட்டது. மேலும் மக்கள் உரிமைகள் பாதுகாப்புக் கழகத்தின் புதிய உறுப்பினர்களாக இணைந்துள்ளவர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில், நீலகிரி மாவடட்ட மக்கள் உரிமை பாதுகாப்புக் கழகத்தின் மாவட்ட செயலாளர் டாக்டர் முனைவர் சா. பிரபாகரன், மாவட்ட அமைப்பாளர் மு சதாசிவம், மாநில நிர்வாகக்குழு செயலாளர் கே. தங்கபாண்டியன், மாநில துணைத்தலைவர் ரஞ்சித் குமார் மாநில மகளிரணி அமைப்பாளர் சுஜாதா, திண்டுக்கல் பொறியாளர் அணி மணிகண்டன், திருப்பூர் மாவட்ட நிர்வாக செயலாளர் ராமகிருஷ்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story