உதகையில் அனுமதியின்றி குதிரையில் ஊர்வலம்: போக்குவரத்து பாதிப்பு

உதகையில் அனுமதியின்றி குதிரையில் ஊர்வலம்: போக்குவரத்து பாதிப்பு
X

சாலையை அடைத்து நிற்கும் குதிரைகள்.

உதகையில் துவங்கப்படவுள்ள பிரபல உணவகத்திற்கு விளம்பரம் செய்ய முக்கிய சாலையில் அனுமதியின்றி சென்ற ஊர்வலத்தை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

உதகையில் பிரபல தனியார் உணவகம் கிளை திறக்கப்பட உள்ளது. இதற்கு விளம்பரம் செய்யும் வகையில் உதகை நகரில் பத்துக்கும் மேற்பட்ட குதிரைகளில் உணவகத்தின் பெயர் கொண்ட கொடியுடன் ஊர்வலம் நடந்தது. உதகை காபி ஹவுஸ் சந்திப்பில் புறப்பட்ட ஊர்வலத்தால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. சம்பவ பகுதிக்கு வந்த B 1 காவல் நிலைய ஆய்வாளர் குதிரைகளை நிறுத்தி அனுமதி இல்லாமல் ஊர்வலம் செல்லக்கூடாது என எச்சரிக்கை விடுத்து திருப்பி அனுப்பினார்.

மேலும் ஊர்வலத்தில் இருந்த குதிரைகளை காவல் நிலையம் அழைத்துச் சென்றன.ர் இந்த சம்பவத்தால் சுமார் உதகை நகரில் ஒரு மணி நேரத்திற்கும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதால், வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்தனர். இச்சம்பவத்தால் உதகையில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!