நீலகிரியில் சுற்றுலா தலங்களை திறக்கக்கோரி இந்து முன்னணியினர் மனு

நீலகிரியில் சுற்றுலா தலங்களை திறக்கக்கோரி  இந்து முன்னணியினர் மனு
X

நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலா தலங்களை திறக்க வேண்டுமென இந்து முன்னணி சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

நீலகிரியில், அனைத்து சுற்றுலா தலங்களை திறந்து வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற வேண்டும் என்று, இந்து முன்னணியினர் மனு அளித்தனர்.

கொரோனோ ஊரடங்கில் அனைத்து மாவட்டங்களுக்கும் ஒரே மாதிரியான தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக நீலகிரி மாவட்டத்திலும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. எனினும், மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத் தலங்கள் மட்டும் திறக்கப்படாமல் உள்ளன.

இதனால், சுற்றுலா தலங்களை நம்பியுள்ள வியாபாரிகள், கைடுகள் உள்ளிட்ட இதை சார்ந்துள்ள பலரும் மிகவும் பாதிப்படைந்துள்ளனர். எனவே சுற்றுலா தலங்களை உடனே திறந்து வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற வேண்டும் என, இந்து முன்னணியினர் மனு அளித்தனர்.

இந்து முன்னணி மாவட்ட தலைவர் வேலுச்சாமி, நகர தலைவர் சுப்ரமணியம், மாவட்ட செயற்குழு உறுப்பினர் முருகேசன், மற்றும் துணை தலைவர் பாலாஜி உட்பட நிர்வாகிகள், மனு அளித்தனர்.

Tags

Next Story