உதகையில் தொடரும் உறைபனியால் கடும் குளிர்: வீடுகளில் மக்கள் முடக்கம்

உதகையில் தொடரும் உறைபனியால் கடும் குளிர்: வீடுகளில் மக்கள் முடக்கம்
X

உதகை மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் உறை பனியால்,  புல் மைதானங்கள் மீது வெள்ளைக் கம்பளம் போர்த்தியது போல் உறைபனி காணப்பட்டது .

உதகை மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் கடந்த 2 நாட்களில் இன்று கடும் உறைபனி நிலவுகிறது.

நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் செப்டம்பரில் துவங்கும் பனி காலம், ஜனவரி பிப்ரவரி மாதங்களில் கடுமையாக காணப்படும். இந்த ஆண்டு சற்று தாமதமாக பனிக்காலம் தொடங்கி இருந்தாலும், தற்போது அனைத்து பகுதியிலும் உறைபனியின் தாக்கம் அதிகரித்துள்ளது.

குறிப்பாக உதகை நகரில் உள்ள நீர்நிலைகள் புல் மைதானங்கள் மீது படர்ந்து இருக்கும் உறை பனி, வெள்ளைக் கம்பளம் போர்த்தியது போல் காட்சியளிக்கிறது இதனால் உதகை நகரில் பல பகுதிகள் குட்டி காஷ்மீர் போல் காணப்படுகிறது.

உதகை நகரில் உதகை அரசு தாவரவியல் பூங்கா குதிரைப்பந்தைய மைதானம் காந்தள் தலைக்குந்தா, எமரால்ட் உள்ளிட்ட பகுதிகளில் கடுமையான உறைபனி காணப்படுகிறது. நீர்நிலைகளில் இருந்து வெளியேறும் உறை பனி, புகை போல காட்சியளிக்கிறது.

உறைபனியால், அதிகாலை வேலையில் பணியை மேற்கொள்ளும் தொழிலாளர்கள், சுற்றுலா பயணிகள் உள்ளிட்ட பலரும் வீடுகளில் முடங்கினர். கடந்த இரண்டு நாட்களில், உதகையில் 1.8. டிகிரி செல்சியஸ்ஸாக கொட்டி வரும் உறை பனி, தற்போது பூஜை டிகிரி செல்சியசுக்கு நெருங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story