உதகையில் கனமழை: பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

உதகையில் கனமழை: பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
X

உதகையில் கனமழை. 

உதகை நகர் மட்டுமல்லாது அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பெய்த கனமழையால் சாலையில் மழை நீர் வெள்ளமாக பெருக்கெடுத்து ஓடியது

உதகை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பெய்த கனமழையால் சாலைகளில் மழைநீர் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. கடந்த இரண்டு நாட்களாக உதகை மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் மேகமூட்டத்துடன் காணப்பட்டு வந்த வானிலையில் இன்று அதிகாலை முதல் நகரில் பல பகுதிகளில் சாரல் மழை பெய்து வந்தது.

இதையடுத்து உதகை நகர் மற்றும் தலைக்குந்தா, பாரஸ்ட் கேட், வேல் வியூ, காந்தள், கேத்தி உள்ளிட்ட பகுதிகளில் மதியத்திலிருந்து கனமழை பெய்தது இந்த மழையால் சாலைகளில் மழை நீர் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் பணிக்கு செல்லும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!