நீலகிரியில் கனமழை மீட்பு குழு வருகை
அரபிக் கடலில் உருவாகியுள்ள டவ்-தே புயலின் காரணமாக நீலகிரி மாவட்டத்திற்கு வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து, மீட்பு பணிகளுக்காக கோவையிலிருந்து தேசிய பேரிடர் மேளாண்மை குழுக்கள் 22 வீரர்கள் உதகை வந்தடைந்தனர்.
அரபிக் கடலில் உருவாகியுள்ள டல் - தே புயலின் காரணமாக நீலகிரி மாவட்டத்தில் உதகை, கூடலூர் மற்றும் குன்னூர் ஆகிய பகுதிகளில் நேற்று இரவு முதல் லேசான மழை முதல் அவ்வப்போது கனமழையும் பெய்து வருகிறது.
இந்நிலையில், நீலகிரி மாவட்டத்திற்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டதை தொடர்ந்து,
மேலும் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்புப் படையினர் நீலகிரி மாவட்ட நிர்வாகம் கேட்டுக் கொண்டதன் பேரில் சீனியர் கமாண்ட் ரேகா நம்பியார் உத்தரவின் பேரில் கமாண்டர் கணேஷ் பிரசாத் தலைமையில் 22 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்புப் படை வீரர்கள் வந்தனர்.
இதனிடையே, நீலகிரி மாவட்டத்தில் உதகை, குன்னூர், கோத்தகிரி, கூடலூர், உள்ளிட்டப் பகுதிகளில் வெள்ளப் பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஆகிய 283 பகுதிகள் கண்டறியப்பட்டுள்ளன. மேலும் 456 பாதுகாப்பு மையங்கள் அமைக்கப்பட்டுளளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu