உதகை சுற்றுப்பகுதியில் இடியுடன் கனமழை - மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

உதகை மற்றும் சுற்றுப்பகுதிகளில், இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக இடியுடன் கூடிய கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

உதகை மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக இடியுடன் பெய்த கன மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது. உதகை மற்றும் அதைச் சுற்றியுள்ள கேத்தி, சேரிங் கிராஸ், மத்திய பேருந்து நிலையம், தலைகுந்தா, கல்லட்டி , எல்க்ஹில் உள்ளிட்ட பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது.

நகரப் பகுதியில் பெய்த கனமழை காரணமாக சாலை முழுவதும் மழைநீர் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் நகர்ப்புறத்தில் பொதுமக்கள் நடமாட்டம் இன்று அதிகமாக காணப்பட்டதால், இந்த மழையினால் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது.

Tags

Next Story
Weight Loss Tips In Tamil