உதகையை உலுக்கிய கனமழை: காற்றில் சரிந்தது ராட்சத மரம்

உதகையை உலுக்கிய கனமழை: காற்றில் சரிந்தது  ராட்சத மரம்
X

கனமழையால், ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் சரிந்து விழுந்த மரம்.

உதகையில் காற்றுடன் பெய்த கனமழையால், தாவரவியல் பூங்காவில் ராட்சத மரம், வேருடன் சாய்ந்து விழுந்தது.

நீலகிரி மாவட்டம், ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் நூற்றாண்டுபழமை வாய்ந்த மரங்கள் உள்பட பல்வேறு மரங்கள் உள்ளன. தற்போது, ஊட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்து வந்தது.

இந்நிலையில், பலத்த காற்றுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் பூங்காவில், ஒரு மரம் வேருடன் முறிந்து விழுந்தது. வேர் பகுதி சுற்றுச்சுவர் அருகே இருந்ததால் சுற்றுசுவரும் இடிந்து விழுந்தது. தொடர்ந்து பூங்கா பணியாளர்கள், மரக்கிளைகளை வெட்டி அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

பூங்கா வளாகத்தில் அபாயகரமான சில மரங்களை வெட்டும் பணி நடந்து வருகிறது. மேலும் காட்டெருமைகள் உள்ளே வருவதை தடுக்க பூங்காவை சுற்றி, சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டது. தற்போது இடிந்து விழுந்துள்ள சுற்றுச்சுவரை உடனடியாக சீரமைக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்து உள்ளது.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil