/* */

நீலகிரியில் கனமழை எச்சரிக்கை: தயார் நிலையில் மாவட்ட நிர்வாகம்

நீலகிரிக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், மீட்புக் குழுக்களுடன் மாவட்ட நிர்வாகம் தயார் நிலையில் உள்ளது.

HIGHLIGHTS

நீலகிரியில் கனமழை எச்சரிக்கை: தயார் நிலையில் மாவட்ட நிர்வாகம்
X

நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்யும் என, இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் முடுக்கிவிட்டுள்ளது.

உதகையில், இது தொடர்பான ஆய்வு கூட்டத்தில் கலந்து கொண்ட பின்னர், செய்தியாளர்களிடையே பேசிய கலெக்டர் இன்னசென்ட் திவ்யா, மாவட்டத்தில், 42 பல்வேறு துறை அதிகாரிகள் கொண்ட கண்காணிப்பு குழு ஏற்படுத்தப்பட்டு 24 மணி நேரம் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது என்றார்.

மழை தாக்கம் அதிகமாக உள்ள கூடலூர், உதகை, குந்தா பகுதிகளில் மழையினால் ஏற்படும் மண் சரிவு மற்றும் மரங்களை உடனுக்குடன் அகற்ற தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலை, மற்றும் தீயணைப்பு துறையினர், ஜேசிபி, மரம் அறுக்கும் எந்திரங்களுடன் தயார் நிலையில் இருப்பதாக, அவர் கூறினார்.

நிலச்சரிவு ஏற்படும் அபாயகரமான பகுதிகளாக 283 இடங்கள் கண்டறியப்பட்டு, அதில் மிகவும் அபாயகரமான 43 இடங்கள் தீவிர கண்காணிப்பில் உள்ளதாகவும், தொடர்ந்து மழை பெய்து வருவதால் வீட்டு சுவர்கள் பாதிக்கப்பட்டு பாதுகாப்பற்ற நிலை ஏற்பட்டால் பொதுமக்கள் அருகில் உள்ள நிவாரண மையங்களுக்கு சென்று பாதுகாப்பாக இருக்குமாறும், ஆட்சியர் கேட்டுக் கொண்டார்.

Updated On: 13 July 2021 5:32 AM GMT

Related News