உதகையில் சுகாதாரத்துறை சுப்ரமணியன் அமைச்சர் ஆய்வு

உதகையில் ஆய்வு மேற்கொண்ட சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன், பழங்குடியினர் கிராமத்தில் தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்தார்.

நீலகிரி மாவட்டத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவது குறித்து மருத்துவர்கள் , அதிகாரிகளுடன் ஆய்வு நடத்துவதற்காக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் உதகை வந்துள்ளார் .

இன்று உதகை அரசு தலைமை மருத்துவமனையில் சுகாதாரத்துறை அமைச்சர் மற்றும் வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் ஆகியோர் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பது குறித்து, அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். உதகை மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைகள் குறித்து அவர் கேட்டறிந்தார்.

உதகை அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா நோயளிகளுக்கு சிகிச்சை அளிப்பது குறித்தும்,புதிதாக அமைக்கப்பட்டுள்ள 6 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட ஆக்ஸிஜன் அமைந்துள்ள பகுதி மற்றும் புதிதாக கட்டப்பட்டு வரும் மருத்துவக்கல்லூரி பணிகளை சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் மற்றும் வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் ஆகியோர் ஆய்வு .
இந்த ஆய்வின்போது சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன், நீலகிரி ஆட்சியர் இன்னசண்ட் திவ்யா உள்ளிட்டவர்கள் உடனிருந்தனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!