உதகையில் காணாமல் போன செல்போன்கள் உரிமையாளர்களிடம் ஒப்படைப்பு
உரியவர்களிடம் செல்போனை ஒப்படைத்த எஸ்பி.
நீலகிரியில் தங்களது செல்போன்களை தவறவிட்டு இதுவரை புகார் கொடுக்காதவர்கள் சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் ஐஎம்இஐ எண்ணுடன் புகார் கொடுக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது. புகார்கள் பெறப்பட்டு, செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டது. உதகை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தொலைந்துபோன செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு உரியவர்களிடம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
சைபர் கிரைம் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு முத்துமாணிக்கம், போலீஸ் இன்ஸ்பெக்டர் பிலிப் ஆகியோர் கண்டுபிடித்த செல்போன்களை பொதுமக்களிடம் வழங்கினர். இதுகுறித்து கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு முத்துமாணிக்கம் பேட்டியின் போது கூறியதாவது:
நீலகிரியில் சைபர் குற்றங்கள் இதுவரை 25 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளது. போலியான ஆவணங்களை கொண்டு செயல்படுவதால், அடையாளம் காண முடியாத நிலை இருக்கிறது. தொலைந்துபோன அல்லது தவறவிட்ட ரூ.8 லட்சம் மதிப்பிலான 40 செல்போன்கள் கண்டுபிடித்து பறிமுதல் செய்யப்பட்டது.
இந்த செல்போன்கள் உரியவர்களிடம் திரும்ப ஒப்படைக்கப்படுகிறது. சைபர் குற்ற வழக்குகளில் இதுவரை ரூ.4 லட்சத்து 74 ஆயிரம் பாதிக்கப்பட்டவர்களுக்கு மீட்டு கொடுக்கப்பட்டு உள்ளது. மேலும் புகார்கள் அடிப்படையில் ரூ.8 லட்சம் பணம் வங்கிகளில் முடக்கப்பட்டது. இந்த பணம் நீதிமன்ற உத்தரவு பெற்று மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பள்ளி, கல்லூரிகளில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu