உதகையில் விவசாயிகளுக்கான குறை தீர்க்கும் நாள் கூட்டம்

உதகையில் விவசாயிகளுக்கான குறை தீர்க்கும் நாள் கூட்டம்
X

பைல் படம்.

மாவட்ட கலெக்டர் மற்றும் அனைத்துதுறை அலுவலர்கள் கலந்து கொள்வதால் விவசாயிகள் குறைகளை கூட்டத்தில் தெரிவிக்கலாம்.

நீலகிரி மாவட்டத்தில் வருகிற 19-ந் தேதி காலை 11 மணிக்கு விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மற்றும் இயற்கை விவசாய குழு கூட்டம் உதகையில் உள்ள கலெக்டர் அலுவலக கூடுதல் வளாக கூட்டரங்கில் நடைபெறுகிறது.

விவசாயிகள் விவசாயம் சம்பந்தப்பட்ட கோரிக்கைகள் ஏதேனும் இருப்பின், அந்த கோரிக்கைகளை நாளை மறுநாளுக்குள் (வெள்ளிக்கிழமை) தோட்டக்கலை இணை இயக்குனர், தபால் பெட்டி எண்.72, ஊட்டி-643001 என்று அலுவலக முகவரிக்கு தபாலிலோ அல்லது நேரடியாகவோ அல்லது jdhooty@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

மாவட்ட கலெக்டர் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொள்வதால் விவசாயிகள் விவசாய சம்பந்தமாக குறைகள் இருப்பின் கூட்டத்தில் தெரிவிக்கலாம். தொற்று பரவாமல் இருக்க சமூக இடைவெளியை பின்பற்றி விவசாயிகள் மற்றும் விவசாய சங்கங்கள் அனைவரும் கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்று கலெக்டர் (பொறுப்பு) கீர்த்தி பிரியதர்ஷினி தெரிவித்து உள்ளார்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!