நீலகிரியில் விவசாயிகளுக்கான குறை தீர் நாள் கூட்டம்

நீலகிரியில் விவசாயிகளுக்கான குறை தீர் நாள் கூட்டம்
X

விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் கலந்து கொண்ட கலெக்டர் அம்ரித்.

நீலகிரியில் மாட்டு தீவன உற்பத்தியை அரசு நிலங்களில் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கவேண்டும் என விவசாயிகள் கேட்டுக் கொண்டனர்.

நீலகிரி மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் மற்றும் இயற்கை விவசாய குழு இணையதளம் மூலம் கலெக்டர் அம்ரித் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் விவசாய சங்கங்களை சார்ந்த விவசாயிகள், அரசு அலுவலர்கள் இணையதளம் மூலம் கலந்து கொண்டனர்.

60 கோரிக்கைகள் விவாதித்து முடிவு காணப்பட்டது. கூட்டத்தில் அட்மா திட்டத்தின் மூலம் வேளாண் இயக்குனரகத்தால் வருடந்தோறும் பயிற்சி, கண்டுனர் சுற்றுலா போன்ற விவசாயிகள் விருப்பப்படி தலைப்புகளில் பயிற்சி மேற்கொள்ளப்படுகிறது. தோட்டக்கலை துறையின் மூலம் உயர் ரக காய்கறி சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு காய்கறி விதை மற்றும் இயற்கை வேளாண் இடுபொருட்கள் வழங்கப்படுகிறது.

நீலகிரி மாவட்டத்தில் தமிழக அரசால் மூலம் வழங்கும் விலையில்லா கறவை பசு மாடு திட்டத்தை ஒதுக்கி தருமாறு கால்நடை பராமரிப்பு மற்றும் மருத்துவ பணிகள் ஆணையருக்கு பிரேரணை அனுப்பப்பட்டு உள்ளது என்ற விவரம் தெரிவிக்கப்பட்டது. இயற்கை விவசாயத்துக்கு அடிப்படையாக இருக்கும் நாட்டு மாடுகளின் எண்ணிக்கையை நீலகிரி மாவட்டத்தில் அதிகரிக்கவும், மாட்டு தீவன உற்பத்தியை அரசு நிலங்களில் மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கேட்டுக்கொண்டனர்.

Tags

Next Story
ai marketing future